பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தமுமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருப்பூர்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதைக் கண்டித்து திருப்பூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் கலந்து கொண்டதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.