3.17-கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளைத் துவக்கி வைத்தார்.



கோவை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளைத் துவக்கி வைத்தார்.



தெற்கு மண்டலத்தில் வார்டு எண் 95, 85, 92, 99 ல்(மேற்கு தோட்டம், திருமறை நகர், பி.கே.புதூர் பிரதான சாலை, குப்பண்ணன் தோட்டம்) 187.2 லட்சம் மதிப்பில் தார் தளம் புதுப்பித்தல், கிழக்கு மண்டலத்தில் வார்டு எண் 75-ல் (நியூ போயஸ் கார்டன், ஆப்பிள் கார்டன்) 87.1-லட்சம் மதிப்பில் தார்தளம் புதுப்பித்தல், மேற்கு மண்டலத்தில் வார்டு எண் 14-ல் (புவனேஸ்வரி நகர்) 43.50-லட்சம் மதிப்பில் தார்தளம் புதுப்பித்தல் ஆகிய பணிகளைத் துவக்கி வைக்கிறார்.



திறப்பு நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 200-கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைத்தல் புதுப்பிக்கும் பணி முதல்வரின் ஆணைக்கிணங்க நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மின் கட்டணத்திற்கு GST-இல்லை. 2018-முதல் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களுக்கு மட்டும் தான் ஜி எஸ் டி வசூலிக்கப்படுகிறது.

அது தெரியாமல் தற்போது வசூலிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிக்கை விட்டுள்ளார். கோவையில் பல்வேறு பகுதிகள் கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் குப்பைத் தொட்டிகள் மட்டுமல்லாமல் குப்பை அள்ளும் வாகனங்களிலும் தவறு நடந்துள்ளது.

1-லட்சத்து 44-ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதுதான் சுவரொட்டி ஒட்டிய அதிமுகவின் 5-ஆண்டுகளாகச் சாதனையா? திமுகவின் இந்த 8-மாத காலத்தில் என்னென்ன செய்துள்ளோம் என்பது மக்களுக்குத் தெரியும் என கூறினார்.



இந்தத் தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...