கோவையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

கோவையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கோவை, பீளமேடு காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர் கணேசன் (45). இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் காளப்பட்டியிலிருந்து சித்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

சித்ரா அருகே வந்தபோது கோவையிலிருந்து சென்னைக்கு அவினாசி சாலையில் சென்ற தனியார் பேருந்து ஒன்று கணேசனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதையடுத்து, அங்குக் குவிந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குக் கணேசனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...