பல்லடத்தில் ரூ.1000 மதிப்பிலான துணிகள் பாதி விலைக்கு விற்பதாகக் கூறியும், கூட்டம் சேர்த்த ராஜஸ்தான் ஜவுளிக்கடை உரிமையாளர் அரசின் ஊரடங்கு விதி முறைகளை மீறி இயங்கியதால், நகராட்சி அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.1000 மதிப்பிலான துணிகள் பாதி விலைக்கு விற்பதாகக் கூறியும் கூட்டம் சேர்த்த ராஜஸ்தான் ஜவுளிக்கடை உரிமையாளர் அரசின் ஊரடங்கு விதி முறைகளை மீறி இயங்கியதால் நகராட்சி அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழகம் முழுவதும் 2022-முன்னிட்டு கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்கிரான் தொற்று அதிகரிப்பு காரணமாகப் பொதுமக்கள்
பாதிக்கப்படாதவாறு வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆங்கில வருட புத்தாண்டை முன்னிட்டு வணிக வளாகங்கள், கடைகள், ஜவுளிக்கடைகள், திரையரங்குகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் ஆன்லைன் வழி கல்வியில் பயில அனுமதி அழித்துள்ளது.
உடல் பயிற்சிக் கூடங்கள் சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவு மட்டுமே பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

தமிழக அரசின் இந்த விதிமுறைகளை மீறும் வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு மருத்துவமனை எதிரே ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் ஜவுளிக்கடையானது புத்தாண்டு சலுகையாக 100 மதிப்புள்ள துணிவகைகள் ரூ.20 க்கும் 500 மதிப்புள்ள புடவைகள் 70 ரூபாய்க்கும் ஆயிரம் மதிப்புள்ள பேன்ட் சட்டைகள் பாதி விலைக்கும் விற்பனை செய்யப்படும் என விளம்பர பேனர் வைத்தும், கேரள செண்டை மேளம் முழங்கக் கடை திறந்து வாடிக்கையாளர்கள் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் பஞ்சு மிட்டாய் மற்றும் பலூன்களை இலவசமாக கொடுத்து வியாபாரம் தடபுடலாக நடந்தேறியது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வாடிக்கையாளர்கள் பலரும் முகக் கவசங்கள் அணியாமலும், கிருமி நாசினி மருந்து வழங்காமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், அரசு விதிமுறைகளை அப்பட்டமாக மீறி வியாபாரம் நடைபெற்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்லடம் நகரில் உள்ள பலரும் கடைப்பிடிக்கும் நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம் என்பவர் மட்டும் நடத்தி வரும் கிருஷ்ணா துணிக்கடையில் விதிமுறைகளை மீறி செய்து வியாபாரம் செய்தது விதி விலக்கு அளித்தது போல் இருப்பதாகவும், இதனை கண்டு கொள்ள வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும், சலுகை விலையில் வாங்க பொதுமக்கள் குவிந்தது விதிமுறை மீறலாகும்.
சலுகை விலையில் ஜவுளி பொருட்களை மட்டுமல்ல கொரோனாவயும் சேர்த்து தங்களது இல்லங்களுக்குக் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த நிலைமையை நேரில் கண்காணித்துக் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
மேலும் நாளை முதல் கடை நடக்க வேண்டும் என்றால் நகராட்சியிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் சாலை ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்ட பந்தல் அப்புறப்படுத்தி 50 சதவீதத்துக்கும் மிகாமல் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கிருமி நாசினி தெளித்து வாடிக்கையாளர்களுக்கு முக கவசத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று எச்சரித்து அறிவுரை கூறினர்.

பல்லடத்தில் அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி ஆங்கில புத்தாண்டு தினமான இன்று சிறப்புச் சலுகையை அறிவித்து பெரும் கூட்டத்தைக் கூட்டிய ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம் என்பவரது ஜவுளிக்கடையில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு எச்சரித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.