கோவையில் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளை: வடமாநில வாலிபர் கைது

காந்திபுரம் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.


கோவை: காந்திபுரம் செல்போன் கடையில் ரூபாய் 20-லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் செல்போன் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரதாப் ராஜ் ஆகியோர் காந்திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு இவர்கள் வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றனர்.

நள்ளிரவு கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கடையிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். உரிமையாளர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரிதிவி பாரதி 27, என்பவரை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர். அவரை அழைத்து வரப்பட்டு 9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவருடைய கூட்டாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...