ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், வேலை தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், வேலை தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் "ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சம்பளத்தை 100- ரூபாயிலிருந்து 475-ரூபாயாக உயர்த்தி தர வலியுறுத்தியும் வேலை தொடங்கும் நேரத்தை 5-மணியிலிருந்து 7-மணியாக மாற்றக் கோரியும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் "தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் ஆக்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்" பதாகைகளையும் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.