ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்கள் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டனம்..!

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே இரவு நேரம் கோவில்கள் திறந்திருப்பது வழக்கம் என்று தெரிவித்தார்.



கோவை: ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்கள் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள கோவில்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்; அதற்கு தடையில்லை என்று, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

ஹிந்து கோவில்களுக்கு தனித்தனியாக சம்பிரதாயங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. காலை முதல் மாலை வரை ஒவ்வொரு காலத்துக்கும் கால பூஜை இருக்கும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே இரவு நேரம் கோவில்கள் திறந்திருப்பது வழக்கம்.

ஆனால், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு, 12 மணிக்கு கோவிலை திறப்பது என்பது கண்டனத்துக்குரியது.

தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே

அரசுக்கு ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...