கல்லூரி மாணவர்களை குறி வைத்து கோவையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆவாரம்பாளையம் சாலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களைப் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் மார்சல் (28), தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஈஸ்வரன் (25), மற்றும் தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் வல்லரசு (23), என்பது தெரியவந்தது.

மேலும், மூவரும் கோவை பீளமேடு சேரன் மாநகர் பகுதியில், அறை எடுத்துத் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அதேபோல அவர்கள் தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2-கிலோ 450-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல, சிங்காநல்லூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இருகூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை நடத்தினர். அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் சிவக்குமார் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்த 240-கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல, பெரியகடை வீதி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உக்கடம் பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டு இந்த நபரைப் பிடித்து சோதனை நடத்தினர். கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் அப்துல் காதர் (28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து 100-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...