கோவையில் முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ போட்டிகளில்‌ உயர்ந்தபட்ச வரிவசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கான விருது - மாநகராட்சி ஆணையர் வழங்கினார்!

கோவை மாநகராட்சி ஜனக்கிரஹா அமைப்புடன்‌ இணைந்து மாநகராட்சி வரிவசூலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கிடையே வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு, முனிசிபல்‌ பிரிமீயர்‌ லீக்‌ போட்டிகள்‌ கடந்த நவம்பர் 1-ம்‌ தேதி முதல்‌ ஆரம்பிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி “ஜனக்கிரஹா” அமைப்புடன்‌ இணைந்து முதன்‌ முறையாக வரி தண்டலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கிடையே வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு நடத்தப்பட்ட முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ போட்டிகளில்‌ உயர்ந்தபட்ச வரிவசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கான விருதுகளை மாநகராட்சி ஆணையர் இன்று (30.12.2021) வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ சொத்துவரி, தொழில்வரி, வரியில்லா இனங்கள்‌ மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌

போன்றவைகளின்‌ கேட்பு தொகைகளை வசூல்‌ செய்ய இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டு ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ அதற்கான பணிகள்‌ நடைபெறும்‌. கோவை மாநகராட்சி ஜனக்கிரஹா அமைப்புடன்‌ இணைந்து மாநகராட்சி வரிவசூலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கிடையே வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு, முனிசிபல்‌ பிரிமீயர்‌ லீக்‌ போட்டிகள்‌ 2021 நவம்பர் 1-ம்‌ தேதி முதல்‌ ஆரம்பிக்கப்பட்டது.

இதில்‌ நடப்பு 2021-22-ம்‌ நிதியாண்டு தொடங்கி நவம்பர்‌ மாதம்‌ வரை வரியில்லா இனங்கள்‌ மற்றும்‌ குடிநீர் கட்டண வசூல்‌ பணிகளில்‌ உயர்ந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த வரிவசூலர்கள்‌ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்‌. 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ வரியில்லா இனங்களின்‌ நடப்பு வசூலில்‌ உயர்ந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த சிவக்குமார்‌-தெற்கு மண்டலம்‌, துரைராஜ்‌- கிழக்கு மண்டலம்‌ வெங்கடாச்சலம்‌- தெற்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ வரியில்லா இனங்களின்‌ நிலுவை வசூலில்‌ உயாந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த ஜெயக்குமார்‌-வடக்கு மண்டலம்‌, சிவக்குமார்‌- தெற்கு மண்டலம்‌, துரைராஜ்‌- கிழக்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ குடிநீர் கட்டண நடப்பு வசூலில்‌ உயாந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த ஜெயக்குமார்‌-வடக்கு மண்டலம்‌, யமுனாதேவி- வடக்கு மண்டலம்‌ மற்றும்‌ சுமதி- வடக்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, 2021-22-ம்‌ நிதியாண்டில்‌ குடிநீர் கட்டண நிலுவை வசூலில்‌ உயர்ந்தபட்ச வசூல்‌ இலக்கை அடைந்த மலா்க்கொடி- தெற்கு மண்டலம்‌, ரமேஷ்குமார்‌- தெற்கு மண்டலம்‌ மற்றும்‌ மகேஸ்வரன்‌ தெற்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌ சாதனையாளர்‌ விருதுகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

மேலும்‌, வரியில்லா இனங்களில்‌ நடப்பு வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த சிவக்குமார்‌- தெற்கு மண்டலம்‌, நிலுவை வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த ஜெயக்குமார்‌- வடக்கு மண்டலம்‌ ஆகியோருக்கும்‌, குடிநீர்‌ கட்டண நடப்பு வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த ஜெயக்குமார்‌- வடக்கு மண்டலம்‌ மற்றும்‌ நிலுவை வசூலில்‌ முதல்‌ இடத்தினை பிடித்த மலா்க்கொடி- தெற்கு மண்டலம்‌ ஆகியோருக்கு சாதனையாளர்‌ விருதுடன்‌ பரிசு கூப்பன்கள்‌ வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா அவர்கள்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ என்‌.அண்ணாதுரை (தெற்கு), செந்தில்குமார்‌ இரத்தினம்‌ (கிழக்கு) உதவி வருவாய்‌ அலுவலா்கள்‌, வரி தண்டலா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...