உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: கோவை காரமடை அருகே கருணாநிதியால் வழங்கப்பட்ட இடத்திற்கு "உதயா நகர்" என பெயர் சூட்டிய திமுகவினர்..!

1996ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை காரமடை அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதியால் வழங்கப்பட்ட இடத்திற்கு "உதயா நகர்" என திமுகவினர் பெயர் சூட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கேரள எல்லைப்பகுதி சீங்குழி. இப்பகுதியில் மலைவாழ் மக்களான இருளர்கள் மற்றும் அருந்ததிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 1996ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இப்பகுதியில் வசிக்கும் அருந்ததிய மக்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 27ம் தேதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் தலைமையில் திரண்ட திமுகவினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் கொடுக்கப்பட்ட இந்த இடத்திற்கு "உதயா நகர்" என பெயரிட்டனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் உதயா நகர் என பெயர் பலகையும் திறக்கப்பட்டு இனிப்புகளை வழங்கி திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் குழந்தைக்கு "இன்பநிதி" எனவும் பெயர் சூட்டப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தோலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா செந்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செந்தில், காரமடை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தாயனூர் பிரதீப் மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை வழங்கியும் விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...