ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கத்தை பொடியாக்கி ஆசன வாயில் மறைத்து கடத்தல் - 4 பேர் கைது..!

தொடர்ந்து அவர்களிடம், தங்கம் கடத்தி வரச் சொன்னது யார்? யாருக்காக கடத்தி வந்தீர்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள தங்கத்தை பொடியாக்கி மறைத்து கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வளைகுடா நாடான ஷார்ஜாவுக்கு மட்டுமே விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருந்து வரக் கூடிய விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி அதனை பறிமுதல் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, 4 வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் மீது சந்தேகம் வரவே 4 பேரையும் அங்குள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் செய்யது முகமது, நசருதீன் முகமது தம்பி, கலீஸ் ரகுமான் முஸ்தபா, தஸ்தகீர் காஜாமொகைதீன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் தங்கத்தை பொடியாக்கி, ஆசன வாயில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்களது பேண்ட் பாக்கெட்டில் கை செயின், செயின் உள்ளிட்டவை இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதனை உருக்கி பார்த்தபோது மொத்தம் 2.2 கிலோ தங்கத்தை 4 பேரும் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.1.10 கோடியாகும்.

இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த சகுபர் சாதிக் செய்யது முகமது, நசருதீன் முகமது தம்பி, கலீஸ் ரகுமான் முஸ்தபா, தஸ்தகீர் காஜாமொகைதீன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம், தங்கம் கடத்தி வர சொன்னது யார்? யாருக்காக கடத்தி வந்தீர்கள்? இங்குள்ள யாராவது கடத்தி வர சொன்னார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...