கோவையில் செங்கல் சூளை மெஷினில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு

குப்பனூரில் உள்ள செங்கல் சூளையில், மெஷினில் சிக்கி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்த சூப்பர் வைசர் மற்றும் ஆப்ரேட்டர் மீது, பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: குப்பனூரில் உள்ள செங்கல் சூளையில், மெஷினில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்த சூப்பர் வைசர் மற்றும் ஆப்ரேட்டர் மீது, பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிரூல் உசேன்(19). இவர் பேரூர் அடுத்த கரடிமடை செல்லும் வழியில் உள்ள குப்பனூரில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன் தினம் மாலை, சூளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மின்தடை ஏற்பட்டது.

அப்போது, சூளையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வரும் கோகுல் கிருஷ்ணாவும், ஆபரேட் அமிருல்லை கலவை கலக்கும் மெஷின் உள்ளே இறங்கி, உள்ளே உள்ள கலவையைச் சுத்தம் செய்யும்படி கூறியுள்ளனர்.

மின்தடை ஏற்பட்டதால், மிஷினின் சுவிட்சை ஆப் செய்யாமல், சூப்பர்வைசரும், ஆபரேட்டரும் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அமிரூல் உசேன் மெஷினுக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் வந்ததால், மெஷின் இயங்கத் துவங்கியது.

இதில், அமிரூல் உசேன் மெஷினில் சிக்கினார். உடனடியாக, சூபர்வைசர் மெஷினின் சுவிட்சை ஆப் செய்து, மெஷினுக்குள் இருந்து அமிரூல் உசேனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார். அஜாக்கிரதையாக இருந்த சூப்பர் வைசர் கோகுல் கிருஷ்ணா மற்றும் ஆப்ரேட்டர் மாரிமுத்து மீது, பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...