திருப்பூரில் பல்வேறு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பு

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மற்றும் பல்லடம் உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4-கோடியே 18-லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மற்றும் பல்லடம் உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்கும் பணி, பூங்கா அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டி, அரசு மருத்துவமனை கட்டிடம், வார சந்தைக்கான புதிய கட்டிடம் என பல்வேறு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரத்திற்கு உட்பட்ட எட்டாவது வார்டு பணப்பாளையத்தில் 75 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பணிக்கும், 12 வது வார்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சின்னையா கார்டன் பகுதியில் 90 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிக்கும், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் உடன் வரும் உதவியாளர்களுக்குத் தங்குமிடம் கட்டுவதற்காகத், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட உள்ள பணிக்கும், 15வது வார்டில் அண்ணா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் அரசு மருத்துவமனை வரை 40 லட்சம் மதிப்பீட்டில் 300 மில்லி மீட்டர் விட்டமுள்ள துருபிடிக்காத வார்ப்பு இரும்பு குழாய் அமைத்தல் மற்றும் 14வது வார்டு எம்ஜிஆர் சாலை அண்ணா சிலை முதல் மங்கலம் சாலை தண்டபாணி கோயில் வரை 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300 மில்லி மீட்டர் விட்டமுள்ள துருப்பிடிக்காத இரும்பு குழாய் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை செய்யப்பட்டு பணிகளைத் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு பே சாமிநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



அதேபோல இரண்டாவது வார்டில் புதிதாக வடிகால் அமைத்தல் சேடபாளையம் பகுதியில் மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்கும் பணி, அரிஜன காலனி பகுதியில் புதியதாக வடிகால் அமைத்தல் என பல்லடம் நகரத்திற்கு உட்பட்ட வார்டுகளில் ரூபாய் 3 கோடியே 66 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு மக்கள் நலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

முன்னதாக பொங்கலூரில் 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வாரச்சந்தையினை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.



மாதப்பூர் ஊராட்சியில் பொங்கலூர் ஊராட்சி பொது நிதியிலிருந்து மாதப்பூர் பட்டத்தரசி அம்மன் கோயிலிலிருந்து திருச்சி ரோடு வரை ரூபாய் 10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல பத்மநாபன் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் பல்லடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமார் பல்லடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நா சோமசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...