திமுகவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் அதிமுக, அமமுக கட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கோதவாடி மயில்சாமி, முன்னாள் கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மயில்சாமி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது, திமுகவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி கதிர்வேல், தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, பொள்ளாச்சி நகர துணை செயலாளர் கார்த்திகேயன், கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.