'மோண்டனா ஹிமிசிங்போலியோ' என்ற களை தாவரங்கள் வளர்ச்சியால் இயற்கையாக வளரக்கூடிய மரச்செடிகள், இயற்கை தாவரங்களின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனச்சரகத்தில் உள்ள களைச்செடிகள் அழிக்கப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில், இதர தாவரங்களுக்கு இடையூறாக உள்ள 'மோண்டனா ஹிமிசிங்போலியோ' என்ற களை தாவரத்தினை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் கணேசன், வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனத்துறையினர், அந்த களைச்செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையுடன், ரத்தினம் கலை மற்றும் அறியவில் கல்லூரி, என்.ஜி.பி., கலைக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், களைச்செடிகளை முற்றிலும் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'மோண்டனா ஹிமிசிங்போலியோ' என்ற களை தாவரங்கள் வளர்ச்சியால், அப்பகுதியில் இயற்கையாக வளரக்கூடிய மரச்செடிகள், இயற்கை தாவரங்களின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
இதனால், தாவர உண்ணிகள் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன், வனவிலங்குகளின் உணவு சங்கிலி தொடர்பில் இப்பகுதியில், வன உயிரினங்கள் இயற்கை சூழலை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, அந்த களைச்செடிகளில் இருந்து விதைகள் பரவாமல் தடுக்கும் வகையில், அறியவில் பூர்வமாக பூக்கள் மற்றும் அதன் விதைகளை சேகரம் செய்து, சுமார் ஒரு டன் அளவில் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.