கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் உட்பட இருவர் கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்..!

அன்னூர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை அன்னூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக வடமாநில இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை குறிவைத்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இந்த தகவலின் பேரில், அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரு இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஒடிசாவை சேர்ந்த லோக்பால் மகனந்தா என்ற இருவரும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.



இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சா மற்றும் ரூ. 3 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அன்னூர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அன்னூர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...