கோவையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வழிதெரியாமல் நின்றவர்களுக்கு வழி காட்டிய சமயத்தில் கழுத்திலிருந்த 7-பவுன் செயினை பறித்துச் சென்ற பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
கோவை: கோவையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வழிதெரியாமல் நின்றவர்களுக்கு வழி காட்டிய சமயத்தில் கழுத்திலிருந்த 7- பவுன் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி வயது 62, நேற்று இவர் ராமலிங்கம் வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது விஜயலட்சுமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2- வாலிபர்கள் அங்கும் இங்குமாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்தனர். அவர்கள் வழி தெரியாமல் இருப்பதாக நினைத்து மூதாட்டி உதவி செய்ய முயன்ற போது கழுத்திலிருந்த 7- பவுன் தங்க சங்கிலியை பறித்து மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தனர்.
அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் தெரிவித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 7- பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற வாலிபர்களைத் தேடி வருகின்றனர்.