புறநகர் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரம்.!!

கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக வீடுதோறும் சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.


கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக வீடுதோறும் சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

கோவை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் 40 சதவீதத்திற்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 37.08 சதவீதமாகக் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் மொத்த பாதிப்பில் ஊரக பகுதியான காரமடையில் கொரோனா பரவல் 7.60 சதவீதமாகவும், துடியலூரில் 9.83 சதவீதமாகவும், சூலூரில் 5.04 சதவீதமாகவும், ஆனைமலை பகுதியில் 5.53 சதவீதமாகவும், மதுக்கரை பகுதியில் 5.28 சதவீதமாகவும் உள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள புறநகர் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.,யால் நியமிக்கப்பட்ட காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட கொரோனா நோய்த் தொற்று கண்காணிப்புக் குழு கடந்த 2வது அலையின் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.

இதனிடையே வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர கிராமங்களில் கூட்டம் கூடுவதைக் கண்காணிக்கத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...