கோவை: கோவையில் வெட்டு சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர் காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 15) கோவையில் உள்ள புறநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கமும் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரிலும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் தனிப்படை உதவி ஆய்வாளர் முரளி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கெங்கம்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 11 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 1,42,450 /- பறிமுதல் செய்தனர்.
மேற்படி நபர்களை கோட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் பெருமாள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.