கோவை: கோவையில் பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவமாகியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகு (25). கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் அங்கு சென்ற போது அந்த பெண்ணுக்கு அதீத பிரசவ வலி ஏற்பட்டது. அவசர நிலையை உணர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரகு, சதீஸ்குமார் மற்றும் மருத்துவ நுட்ப நிபுணர் பிரபு ஆகியோர் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பார்த்தனர்.
அப்போது அந்த் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும் சேயும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவசர நிலையை உணர்ந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.