வால்பாறையில் கொட்டும் மழையில் நிவாரண பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.!!

கோவை: வால்பாறையில் கொட்டும் மழையில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வாங்கப் பொதுமக்கள் காத்திருந்தனர்.


கோவை: வால்பாறையில் கொட்டும் மழையில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வாங்கப் பொதுமக்கள் காத்திருந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அ 17644 பேர்களுக்கும் திமுக கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தினம் சில மாதங்களுக்கு முன்பு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்பு கோவை பகுதியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் இந்த கொரோனா நிவாரணப் பொருள்கள் 5 கிலோ அரிசி 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இன்று 5வது வார்டு கருமலை எஸ்டேட்டில் நிவாரண பொருட்கள் வழங்குவதாகத் தெரிவித்தனர். அப்பகுதியில் கொட்டும் மழையிலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கக் காத்திருந்தனர்.



திமுக பொறுப்பாளர் பால் பாண்டி மற்றும் வர்த்தக அணி j பாஸ்கர் முன்னிலையில் கருமலை எஸ்டேட் கிளைச் செயலாளர் செல்லத்துரை, முருகன் ஆகியோர் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் கொட்டும் மழையில் குடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...