கோவை: டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானை முகாமில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

வனத்தைப் பாதுகாக்கும், யானைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் நாள் உலக யானைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி இன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில், பராமரிக்கப்பட்டு வரும் 28 வளர்ப்பு யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கோழிகமுத்தி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சிறப்பு வழிபாடு செய்யும்போது யானைகள் துதிக்கை தூக்கி தரிசனம் செய்த காட்சி அங்கிருந்த மலைவாழ் மக்கள் மற்றும் யானை பாகன் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக உலக யானைகள் தினம் ஆடம்பரம் இல்லாமலும் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் கொண்டாடப்பட்டதாக வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.