கோவை கணபதி பகுதி 46-வது வட்டத்தில் பல நாட்களுக்கு பின் எரிந்த தெருவிளக்குகள்..! திமுக பொறுப்புக் குழு உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை: கோவை மேற்கு மண்டலம் கணபதி 46-வது வட்ட பகுதியில், பல நாட்களாக சாக்கடை தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவும் நிலை இருந்து வந்துள்ளது.


கோவை: கோவை மேற்கு மண்டலம் கணபதி 46-வது வட்ட பகுதியில், பல நாட்களாக சாக்கடை தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவும் நிலை இருந்து வந்துள்ளது.

கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கணபதி பகுதி, 46-வது வட்ட சித்தா தோட்டம் பகுதிவாழ் பொதுமக்கள் சார்பாக மீனாட்சி சுந்தரம், மளிகை கடை சிவகுமார், ஆகியோர் கடந்த ஒரு வருடமாக சாக்கடை தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தேங்கி இருப்பதால், அதை சரி செய்து கொடுக்குமாறு கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்திடம் புகார் மனு அளித்தனர்.

அம்மனுவில், அதே பகுதியில் உள்ள மூகாம்பிகை நகர், பூந்தோட்டம், மாமர தோட்டம், பெரியார் நகர், ஆகிய பகுதிகளில் 7-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.

மனுவின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துச்சொல்லி ஒரே நாளில் சாக்கடை அடைப்பை நீக்கும் இயந்திரம் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு சாக்கடை தூர்வாரப்பட்டது. மேலும், பழுதடைந்த நிலையில் இருந்த தெரு விளக்குகளும் புதியதாக மாற்றி கொடுக்கப்பட்டது.

அதனால், பல நாட்களாக அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்த கணபதி பகுதி மக்கள், திமுக பொறுக்குழு உறுப்பினர் கணபதி சம்பத்திற்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...