கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தையே உலுக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரம் வழக்கில் கடைசியாக அதிமுக மாணவர் அணியைச் சேர்ந்த அருளானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, ஜாமீனை ரத்து செய்த நீதிபதி கோவை மகிளா நீதிமன்றத்திற்கு 6 மாதத்தில் வழக்கை முடிக்க ஆலோசனை வழங்கி, சிபிஐக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி என்ற புதிய பெண் அதிகாரியை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, வழக்கை ஆறு மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் சிபிஐ விசாரணைக்கு தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் உதவ வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.