கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த இடையூறு செய்ததாக அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது வழக்குபதிவு!

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று சோதனை நடந்த போது இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று சோதனை நடந்த போது இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவரது நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், பலரது வீடுகளிலும் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் எந்த ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என்றும் ஒரே ஒரு பெட்டக சாவி மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடப்பதை அறிந்த கோவை அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டத்திற்கு புறம்பாக கொரோனா தொற்றை பரப்புதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே செல்வராஜ், மகேந்திரன், அமுல் கந்தசாமி, எம்.எஸ்.எம். ஆனந்தன், கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம் மற்றும் ஓ.கே.சின்னராஜ் உட்பட 187 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அதிமுகவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...