திருப்பூர்: 100-நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்குக் குறைந்த நாட்களுக்கு மட்டுமே பணி வழங்குவதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் மனு கொடுத்து போராட்டம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் மாணிக்கா புரம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கா புரம், ராசாகவுண்டம்பாளையம், அம்மா பாளையம் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களில் 100-நாள் வேலைத் திட்டத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு சில கிராமங்களில் மட்டும் குறிப்பிட்ட சிலருக்கு 100-நாள் வேலை வழங்குவதாகும் மற்றவர்களுக்கு 10-முதல் 15-நாட்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பஞ்சலிங்கம் தலைமையில், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட 100-நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் தங்களுக்குப் பாரபட்சமின்றி தங்களுக்கு 100-நாட்களும் முழுமையாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷிடம் இது தொடர்பான மனு ஒன்றை அளித்தனர். பல்லடம் அருகே 100-நாள் வேலைத் திட்டத்தில் அனைத்து நாட்களும் வேலை தர வேண்டும் என்று பல்லடம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.