கோவை: சேரன் மாநகர் குடியிருப்பு பகுதி மெயின் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் சேரன் மாநகர் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் 568-வீடுகள் உள்ளன.
இதுதவிர, சேரன் மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில் மொத்தம் 7-பஸ் ஸ்டாப்கள் உள்ளன.

முதல் பஸ் ஸ்டாப் துவங்கி ஏழாவது பஸ் ஸ்டாப் வரை ரோட்டோரங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.இடி தெருவிளக்குகள் அடிக்கடி எரிவதில்லை. இதனால் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாகப் பாதசாரிகள் மிகவும் அச்சத்துடன் சாலையோரத்தில் நடந்து செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது. தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் வாகன விபத்துகள் நடப்பதும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து தெரு விளக்குகளும் சரியான முறையில் தடையின்றி இரவு நேரங்களில் எரிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே சேரன் மாநகர் குடியிருப்பு வாசிகளின் எதிர்பார்ப்பாகும்.