திருப்பூர்: திருப்பூரில் ரயில்வே தண்டவாளத்தில் நின்ற சரக்கு வாகனத்தால் திருப்பூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் 30-நிமிடம் தாமதமாகச் சென்றது.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில், உள்ள இரண்டாவது ரயில்வே கேட் டிராக்கை சரக்கு வாகனம் கடந்த போது வாகனத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாகத் தண்டவாளத்திலேயே சரக்கு வாகனம் நின்றது.

இதனை அடுத்து, உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, அவ்வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
பின்பு பொதுமக்கள் உதவியுடன் சரக்கு வாகனம் தண்டவாளத்தை அடுத்த சாலைப்பகுதிக்கு, கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதன் காரணமாகத் திருப்பூர் வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் 30- நிமிடம் தாமதமாகச் சென்றது.