கோவை: கோவையில் ரயிலில் 37 கிலோ வெள்ளி கடத்திய நபரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரனாக பேசியதை தொடர்ந்து, போலீசார் அந்தப் பயணியின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 31 கிலோ 660 கிராம் வெள்ளி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் திருச்சூரைச் சேர்ந்த ஷேக் முகமது (42), என்றும் இவர் சேலத்தில் இருந்து வெள்ளி ஆபரணங்கள் வாங்கி ரயிலில் திருச்சூர் குன்னங்குளம் பகுதியில் உள்ள தங்க வியாபாரிகளுக்கு விற்பனை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலக்காடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக்முகமதுவை கைது செய்து வெள்ளி பறிமுதல் செய்தனர்.