கோவையில் உள்ள லாட்ஜில் உடலில் காயங்களுடன் பெண் மர்மமாக உயிரிழப்பு - கள்ளக்காதலன் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி!

கோவை: கோவையில் உள்ள ஒரு லாட்ஜில் உடலில் காயங்களுடன் பெண் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கள்ளக்காதலன் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் உள்ள ஒரு லாட்ஜில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரது கள்ளக்காதலன் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (58), இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி பிந்து (46), என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கணவர், மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில், நேற்று லாட்ஜில் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

இதனையடுத்து, சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிந்து உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் அருகே முஸ்தபா கை கால் கழுத்து பகுதியில் கத்தியால் அறுத்து காயம் மற்றும் பாட்டிலால் குத்திய காயங்களுடன் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி கிடந்தார்.

பின்னர், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், காட்டூர் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். முஸ்தபா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிந்து 3 நாட்களுக்கு முன் இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இவர்கள் தங்கியிருந்த அறையில் எலி மருந்து பேஸ்ட் இருந்தது. பின்பு எலிமருந்து தின்று தற்கொலை செய்திருக்கலாம். இல்லாவிட்டால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடல் அழுகி விட்டதால், உடலில் காயங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. பிந்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம்? அதன்பின் முஸ்தபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர்.

முஸ்தபா பிந்துவை கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது இவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார்களா? அவர்கள் பிந்துவை கொலை செய்து இருக்கலாம்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிந்துவின் சடலம் பிரேத பரிசோதனை செய்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவிக்கின்றனர். இருவரையும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து போலீசார் வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...