கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் குறித்து சர்ச்சை எழுந்தநிலையில், தற்போது, அந்த சர்ச்சைக்குரிய திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டுள்ளது.

கோவை மருதமலை செல்லும் ரோட்டில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் நூலகமும் இயங்கி வருகின்றது. நூலகத்தில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நூலகத்தில் உள்ள திருவள்ளுவர் படம் காவி உடை அணிந்த நிலையில் காட்சியளிப்பதாக சர்ச்சை எழுந்து உள்ளது. இதற்கு கம்யூனிஸ்டு மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இது மத சாயம் பூசும் நோக்கம் இந்த செயல் அங்குள்ள அதிகாரிகளால்தான் செயல்படுத்தபட்டிருக்கும். இதுகுறித்து நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். எனவே, அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
இதற்கிடையே வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. ‘‘திருவள்ளுவர் சிலையானது புதியதாக வைக்கப்பட்டுள்ள சிலை அல்ல. அந்த சிலை 2015 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்த திருவள்ளுவர் சிலையை அகற்ற அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே, இந்தநிலையில் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த ஒரு படம் அகற்றப்பட்டது'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.