திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் ஏழாவது மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் 2009ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி துவங்கப்பட்டது. அப்போது தனி அலுவலராக இருந்த சமயமூர்த்தி திருப்பூரில் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக மதிவாணன், கோவிந்தராஜ், ஜெயந்தி, பழனிச்சாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினர். கடந்த 2019 செப்டம்பர் 29ம் தேதி முதல் விஜய கார்த்திகேயன் திருப்பூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மின்சார உற்பத்தி மற்றும் தொடர் அமைப்பு கழக இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் வினித் திருப்பூர் மாவட்டத்தின் ஏழாவது மாவட்ட ஆட்சியராக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயது நிரம்பிய டாக்டர் வினித் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். கேரளா சிவில் சர்விஸ் அகாடமியில் பயிற்சி பெற்று IAS தேர்வில் இந்திய அளவில் 36வது ரேங் பெற்றுள்ளார்.(2013 பேட்ச்). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். அப்பொழுது இவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடாமல் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும், திருப்பூருக்கு அதிக தடுப்பூசி கிடைக்க முயற்சி மேற்கொள்வோம். பெறப்படும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். தற்போது திருப்பூரில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரிசோதனை அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.