நீலகிரியில் பருவமழை தீவிரம் - பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு..!

நீலகிரி: நீலகிரியில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில், நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, 83 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானியில், மாவட்டத்தில் அதிகபட்சமாக 109 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்று வீசுவதால், குந்தா, புதுமந்து, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்ததால், சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

இதனையடுத்து, சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் உடனுக்குடன் அகற்றினர். ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

இது குறித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''இரண்டு நாட்களாக மழை அதிகரித்துள்ளது. 42 மண்டல குழுக்கள், பேரிடர் பகுதிகளில் கண்காணிப்பில் உள்ளனர். தாழ்வான மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...