திருப்பூர்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கக் கூடிய பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இது அமைந்து விடுவதாகவும் தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் சரக்கு ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.