சாரைப்பாம்பை வறுத்து உண்பதாக பேஸ்புக் பதிவு: வன ஆர்வலர்கள் கடும் கண்டனம்

கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் சுப்ரமணியம். இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று அதனை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், அதனை வறுத்து உண்ணவிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.



இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிராஜூதீன் கூறுகையில், "வன உயிரினங்களை வதைப்பது சட்டப்படி தவறு. கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் அருகே பறவைகளை வேட்டையாடி நான்கு பேர், அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் புகார்களை தெரிவிக்கவே அந்த நால்வரும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் தற்போது மற்றொருவர் சாரைப்பாம்பை கொன்று உண்பதாகப் பதிவு செய்துள்ளார்.

உழவனுக்கு நண்பனாக விளங்கும் சாரைப்பாம்பை விவசாய நிலத்தில் வைத்தே கொன்று இருப்பது வேதனை அளிக்கிறது. விசத்தன்மை இல்லாத சாரைப்பாம்பானது, விவசாய நிலத்தில் உள்ள எலி போன்ற உயிரினங்களை உண்டு, பயிர்களை சேதமடையாமல் பாதுகாக்கும் நண்பன்.



எனவே, இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...