கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இந்து இளைஞர் முன்னணி கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S. அஜித்குமார் தலைமையில் அரசு பள்ளிகள் மேம்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் அரசினர் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை ஆண், பெண் பள்ளிகள் என மொத்தம் 1212-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் பல இடங்களில் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற நிலையிலும் இருப்பதாகவும், இதனால் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில தொடக்கப் பள்ளிகளில் இன்னும் கழிவறை வசதி இல்லாத நிலை தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பல அரசு பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதிகளில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி கட்டிடங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உடனடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் கணிப்பொறி, வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வக உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளை அரசு சார்பில் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், கோவை கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...