கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் : 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று  மாலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி விசாரித்த போது அதில் 108 பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 



இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த தர்மர் (50), பாண்டீஸ்வரன் (22),  இருளாண்டி (42) மற்றும் சதீஸ் குமார் (33) ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்திய கார், பணம் ரூ.1,50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையிலடைத்தனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...