ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை:

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பர் நிர்மல் குமார் ஆகியோர் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்டபணப் பிரச்சனை மற்றும் முன்விரோதம் காரணமாக, இருவரும் கடத்தப்பட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் அடைத்து வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அவர்களை விடுவிக்க ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என உறவினர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின் பேரில், போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. போலீசாரின் ஆலோசனையின்படி, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் கடத்தல்காரர்களை தொடர்புகொண்டு, பணத்தை தயார் செய்துள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, திருப்பூர் பேருந்து நிலையம் அருகே பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கடத்தல் கும்பல் கூறியதைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் சாதாரண உடையில் போலீசாரும் சென்று கண்காணித்தனர்.

அப்போது பணத்தை பெற வந்த இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த ஆனந்தன் மற்றும் மோகன் என்பது தெரியவந்தது. மேலும், திருப்பூரைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் காளிதாஸ் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அவர்கள் கடத்தலுக்கு உதவியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, திருப்பூரில் பதுங்கியிருந்த ராம்குமார் மற்றும் காளிதாஸையும் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட நவீன் மற்றும் நிர்மல் குமாரை பத்திரமாக மீட்டனர். இந்த வழக்கில் ஆனந்தன், மோகன், ராம்குமார் மற்றும் காளிதாஸ் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.



(ராம்குமார்- காளிதாஸ்)

இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் திருப்பூரைச் சேர்ந்த கருப்பசாமியை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கருப்பசாமிக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

கடத்தல் வழக்கில் தொடர்புடைய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், மேலும் ஒரு குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் கைது செய்யப்பட்டதும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...