டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவனைக் கடத்த முயற்சி

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் அருகே உள்ளது சீனிவாசா நகர். இங்கு குடியிருந்து வருபவர்கள் செந்தில்- அனுராதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரிகாலன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருப்பூருக்கு குடும்பத்துடன் குடியேறி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அனுராதா இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கரிகாலன் வழக்கம் போல் அருகில் டியூசனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சைக்கிள் பஞ்சராகி விடவே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென கரிகாலனை வாயை பொத்தி இருசக்கரவாகனத்தில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஒருகட்டத்தில் தனக்கு பின்னாள் அமர்ந்திருந்த கடத்தல்காரனின் கையை சிறுவன் கடித்துள்ளான். இதனை அடுத்து அங்குள்ள பேக்கரி முன்பாக சிறுவனை இறக்கிவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்களிடம் தான் கடத்தப்பட்டு தப்பி வந்த சம்பவம் குறித்து கரிகாலன் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதும், அவர்கள் வெளியூர் சென்றுள்ளதாள் திரும்பி வந்த பிறகு வீடியோ பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...