கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார் தப்பி ஓடிய நிலையில், அவரை பந்தயசாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார் என்பவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பந்தயசாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார், கார் விற்பனை தொடர்பான தகவல்களை சேகரித்து, அவற்றை தனது கார் என்பதுபோல் OLX செயலியில் பதிவேற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் முன்பணமாக பணம் பெற்று மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திராவில் கைது செய்யப்பட்டபோது உடல்நலக்குறைவு இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழகத்திற்கு வந்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் இதேபோன்ற முறையில் கார் விற்பனை செய்வதாகக் கூறி இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் போலீசார் அவரை கைது செய்து, கடந்த வாரம் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவு இருப்பதாக தெரிவித்ததால், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று மாலை கைதிகள் வார்டில் இருந்து பிம்முடு அஜித்குமார் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே ஆந்திரா போலீசாரை ஏமாற்றி மருத்துவமனையில் இருந்து தப்பிய அதே பாணியில், தற்போது தமிழக போலீசாரையும் ஏமாற்றி தப்பிச் சென்றிருப்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பந்தயசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...