சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டுகோள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர் தேக்கம் ( sump) , மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகளை Overhead tanks)  சுத்தம் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, 

கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தரை மட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் மேல் நிலைநீர் தேக்க தொட்டிகளை கண்டிப்பாக சுத்தம் செய்தல் வேண்டும். அதற்கு ஏதுவாக இந்த இரு நாட்களில் மட்டும் மதியம் 02.00 மணிக்குமேல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

டெங்குவை கட்டுக்குள் வைப்பதற்கு தினந்தோறும் ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமரிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான லார்வாக்களை அழிப்பதற்கு அபேட் மருந்துகளை தெளிக்கப்பட்டு வருகின்றது. மழைகாலங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தடுக்க முடியும். நகர, மற்றும் கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியாகும் மூலங்களை கண்டறிய உதவி செய்வார்கள். மேலும் சுகாதாரதுறை அலுவலர்கள் வீட்டினை ஆய்வு செய்யும் போது தக்க ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தை டெங்கு கொசு இல்லா மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளில் தங்களை முழு அளவில் அர்ப்பணித்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...