20 ஆண்டுகள் வீடில்லாமல் இருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வீடில்லாமல் சாலையில் தங்கியிருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சிச் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் தலைவர் ந.பன்னீர்செல்வம் அளித்துள்ள மனுவில், துடியலூர் சந்தையில் திறந்த வெளியில் வீடில்லாமல் வசிக்கும் சாட்டையடி மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது. சாட்டையடி மக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளின்றி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் வசிப்பதும், வளர்மகளிர் நிலையும் மிக மோசமாய் உள்ளது. 



கைகளை அறுத்து சாட்டையால் அடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அவ்வாறு பிழைத்து வரும் சாட்டையடி மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக கோவை மாநகரில் இருந்து வருகின்றனர். அம்மக்கள் சுயமரியாதையோடு வாழ மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்புரிமை நிதியில் இருந்து வீடு வழங்கியும், மாற்றுத் தொழில் செய்ய கடனுதவியும் உடனடியாக வழங்கிட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...