நீர்நிலைகள் அருகே பனை விதை நடும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தற்போது, பசுமையை மீட்டுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முந்தைய களப்பணியில் போது விதைப் பந்துகள் வீசும் பணி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 33-வது தொடர் களப்பணியில் பனை விதை நடும் ஐந்தாவது வார களப்பணி இன்று நடைபெற்றது. பேரூர் அருகே உள்ள கங்கநாராயணசமுத்திரம் மற்றும் சொட்டையாண்டி குட்டை ஆகிய பகுதியில் நடைபெற்ற இந்த களப்பணியின் போது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பனை விதை நடும் களப்பணியில் ஈடுபட்டனர்.



இதில், இரண்டு துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் துளையிடப்பட்டு 1200 பனை விதைகள் நடப்பட்டன. 



முன்னதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு துளையிடும் இயந்திரம் வழங்கி உதவிய ரோட்டரி கிளப் ஜெனித் கோயம்புத்தூர்-க்கும் நேசம் இயற்கையோடு அமைப்பிற்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...