வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு பகுதியில் 7 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை தாக்கிய 7 பேரை பந்தையசாலை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஏழு பேரில் ராமகிருஷ்ணன், அஜித்குமார், கார்த்திக், சக்திவேல் மற்றும் அருண்பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...