சின்னாம்பதி அரசு பழங்குடியினர் பள்ளியில் இடைநிலை ஆசிரியை பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களின் கல்வி நலனுக்காக, சின்னாம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியை காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இது ஒப்பந்த முறையில் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதியத்தில் நிரப்புதல் ஆகும். இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 2017 ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வு வரும் ஆகஸ்ட் 31ம் தேதியன்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநர் குறிப்பிடும் இடத்தில் நடத்தப்படும். 

எனவே, இதற்கு சரியான தகுதியை பெற்றுள்ள பழங்குடியினர் நல இனத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், இத்துடன் இரண்டு புகைப்படங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.

மேலும், இதில் விண்ணப்பித்து தகுதித் தேர்விற்கு வருவோர் டி.டீ.அடி சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் பட்டய சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்று, வேலை வாய்ப்பக பதிவு அட்டை உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...