நாட்டின் பன்முக பண்பாடுகளை பேணிக்காக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை துவங்கி வைப்பதற்காக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவை வந்தார்.

அப்போது அவர்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :-  நாட்டின் 71-வது சுதந்திர நாளன்று வேற்றுமையில் ஒற்றுமை, மத நல்லிணக்கணம் மற்றும் நாட்டின் பன்முக பண்புகளை பேணி காப்பாற்ற உறுதியேற்க வேண்டும்.  



மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்பட தவறியதால் மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளிப்பது ஏற்புடையது அல்ல, நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.

அதிமுக 3 அணிகளும் பாஜக-விடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மதுரை கூட்டம் ஒரு நாடகம். பாஜக-வுக்கு யார் முதலில் கூஜா தூக்குவது என்பதற்காகவே அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு செயலிழந்து விட்டு கோமா நிலையில் உள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளைகளில் மக்கள் நலனை தமிழக அரசு காவு கொடுத்து வருகிறது. 

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழகத்தில் வலிமையான அரசு இல்லை என்பதால் காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கூறியிருப்பதும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...