கோவையில் மழைகாலம் துவங்கி விட்ட காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் மண்டல வாரியாக தீவிர கண்காணிப்புடன் சிறப்பு கவனம் செலுத்தி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு மாநகராட்சி 5 மண்டல வார்டு பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (21.07.2017) மாநகராட்சி ஐந்து மண்டல உதவி ஆணையர் தலைமையில், மண்டல சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுடன் மண்டல வாரியாக டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் மூலமும், அரசு வெளியிட்டுள்ள டெங்கு விழிப்புணர்வு குறும்படம் மூலமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் விளக்கிக் கூறினார். மேலும், இதனை நலச்சங்கங்கள் மூலம், குடியிருப்பவர்களுக்கும் எடுத்துரைக்க வழியுறுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக இது போன்று பல்வேறு டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக டெங்கு தடுப்பு பணிக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறும், மேலும் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், சுயமாக மாத்திரை மருந்துகள் உட்கொள்ள வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் கேட்டுக்கொண்டார்.