பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் "இசைஞர்- 2017" போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தி இந்து தமிழ் நாளிதழ், கோவை நன்னெறிக் கழகம் மற்றும் சரோஜினி நடராஜ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி!

இசைக்கருவிகளை இசைக்கும் இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் கோவை நன்னெறிக்கழகம், சரோஜினி நடராஜ் அறக்கட்டளை மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ் இணைந்து ‘இசைஞர்- 2017’ எனும் இசைக்கருவிகள் இசைக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு 13 முதல் 19 வயதிற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

தகுதிச்சுற்று போட்டிகள் ஜூலை 29-ம் தேதியும் இறுதிப் போட்டி ஜூலை 30-ம் தேதி அன்றும் கோவை சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவரவர் இசைக்கருவிகளை கையோடு எடுத்து வரவேண்டும். உணவு மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றுடன் இசைக்க விரும்பும் கருவியின் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://bit.ly/hindu-instrumental-contest தி இந்து அலுவலகத்தில் (19&20 ஏ.டி.டி காலனி, எல்.ஐ.சி ரோடு, கோவை-18) நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-07-2017.

வயது சான்று (பள்ளி / கல்லூரி அடையாள அட்டை) போட்டி நடைபெறும் அன்று கொண்டு வரவேண்டும்.

இளம் திறமைகளைக் கண்டறிந்து அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில் இலாப நோக்கங்கள் இன்றி நடத்தப்படும் நிகழ்ச்சி இது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு: 9843131323 / 0422 - 2212572.

இதில், காட்ஸ் வில்லா, உடுமலை.காம் மற்றும் ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி மற்றும் டிஜிட்டல் பார்ட்னராக சிம்ப்ளிசிட்டி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...