ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணரும் வருமான வரித்துறை அதிகாரிகள்!

ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை பாதுகாக்கும் தரவு மறையாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் திணறியதால் பொதுமக்களின் குழப்பங்கள் தீர்க்க முடியாத நிலையே நிலவுகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கான ஜிஎஸ்டி பயிலரங்கம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சேலம் மண்டல மத்திய கலால் வரித்துறை ஆணையர் கண்ணன், கோவை மண்டல துணை ஆணையர் கோவிந்தராஜ், பட்டய கணக்காளர் முரளி உள்ளிட்ட வருமானத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி குறித்து மக்களிடையே சாதகமான அம்சங்களை மட்டும் வெளியிடுமாறு வலியுறுத்தினர்.



அப்போது, ஜிஎஸ்டி வரி பதிவிற்காக சேகரிக்கப்படும் தகவல்களை டேட்டா என்கிரிப்சன் எனப்படும் தரவு மறையாக்கம் செய்வது எப்படி என பத்திரிகையாளர் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் தொழில்நுட்ப கேள்விகளுக்கு தற்போதைக்கு தங்களிடம் பதில் இல்லை என தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி தகவல்களின் பாதுகாப்பு பணிகள் 49 சதவீதம் அரசிடமும் 51 சதவீதம் எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமும் உள்ளது. இதனால், தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 8 அம்ச தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், ஜிஎஸ்டி வரியில் 20 சதவிகித பொருட்கள் மட்டுமே விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ள 80 சதவிகித பொருட்கள் விலை உயர வாய்ப்பில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என கணிக்க முடியாது. தற்போது விலை உயர்வு ஆண்டுக்கு 2.18 சதவிகிதம் அளவிற்கு உள்ளது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுவதால் இந்த விலை உயர்வு 3.5 சதவிகிதம் மட்டுமே உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தற்போது இந்திய அரசு 64 பிட் என்கிரிப்சனும், வாட்ஸ் ஆப் 128 பிட் என்கிரிப்சனும் பாதுகாப்பு அம்சங்களாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...