கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.

Coimbatore:

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (26.05.2026) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டம் மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறைசார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...